Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கி 2023ன் முதல் அரை ஆண்டில் வட்டி வருமானத்தில் 150.812 பில்லியன் ரூபாய் உட்பட மொத்த வருமானமாக 167.668 பில்லியன் ரூபாய்களை பதிவு செய்துள்ளது. இவை ஆரோக்கியமான உயர் மட்ட வளர்ச்சியாக முறையே 40.29 வீதம் மற்றும் 71.15 வீதம் என பதிவாகி உள்ளன. வங்கித்துறையில் குறிப்பிடத்தக்க தளம்பல்கள் நிலவிய காலப் பகுதியில் இந்த வளர்ச்சி வீதங்கள் பதிவாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.
கொமர்ஷல் வங்கி குழுமம் கட்டணங்கள் மற்றும் தரகு வருமானங்களையும் சேர்த்து 22.27 வீதம் அதிகரித்து ரூ. 14.337 பில்லியன்களாக பதிவாகியது. தேறிய கட்டணங்கள் மற்றும் தரகு வருமானம் 19.30 வீதத்தால் அதிகரித்து ரூ. 10.591 பில்லியன்களாகவும் தேறிய ஏனைய செயற்படு வருமானம் 236.42 வீதமாக அதிகரித்து ரூ. 17.086 பில்லியன்களாகவும் பதிவாகியது. இது 2022ன் முதல் அரையாண்டு பகுதியில் ரூ. 12.524 பில்லியன்கள் நட்டமாக இருந்தது.
எவ்வாறேனும் கடந்த ஆறு மாதங்களில் வட்டிச் செலவினங்கள் ரூ. 65.958 பில்லியன்கள் அல்லது 139.14 வீதமாக அதிகரித்து ரூ. 113.362 பில்லியன்களாக பதிவாகியது. குழுமத்தின் தேறிய வட்டி வருமானம் 8.01 வீதத்தால் குறைவடைந்து ரூ. 37.450 பில்லியன்களாக இருந்தது.
குழுமத்தின் மொத்த செயற்பாட்டு வருமானம் 27.03 வீதத்தால் குறைவடைந்து ரூ. 50.520 பில்லியன்களாக உள்ளது. ஆனால் தேறிய செயற்பாட்டு வருமானம் மீளாய்வுக்கு உட்பட்ட குறிப்பிட்ட காலப்பகுதியில் 9.69 வீதத்தால் அதிகரித்து ரூ. 37.309 பில்லியன்களாக உள்ளது. ஆறு மாத காலத்துக்கான குறைபாட்டு ஒதுக்கீடு மற்றும் நட்டங்களுக்காக ரூ. 13.211 பில்லியன்கள் குழுமத்தால் ஒதுக்கப்பட்ட பின்னராகும். 2022 க்கான குறைபாட்டு கட்டணம் இலங்கை நாணயத்தின் மதிப்பிறக்கம் காரணமாக வெளிநாட்டு நாணய மதிப்பீடு அரச பிணைகளுக்கான கணிசமான மேலதிக ஒதுக்கீட்டை உள்ளடக்கியதாகும். மொத்த செயற்பாட்டு செலவினம் 18.04 வீதத்தால் அதிகரித்து ரூ. 21.285 பில்லியன்களாக இருந்தது.
குழுமத்தின் மொத்தக் கடன்கள் மற்றும் முற்பணங்கள் கடந்த ஆறு மாத காலங்களில் 4.71 வீதமாகக் குறைவடைந்து ரூ. 1.188 ட்ரில்லியன்களாக உள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதி அங்கீகாரத்தை தொடர்ந்து வெளிநாட்டு நாணயங்களின் அடிப்படையிலான கடன்கள் மற்றும் முற்பணங்களின் மீள் மதிப்பீட்டுத் தாக்கம் இதற்கு ஒரு வகையில் காரணமாகும். குழுமத்தின் மொத்த வைப்பு 30 ஜுன் 2023ல் ரூ. 1.959 ட்ரில்லியன்களாகும். ரூபாயின் அடிப்படையிலான வைப்புக்களின் அதிகரிப்பு 2022 முடிவு முதல் ரூ. 48.47 பில்லியன்களாக அதிகரித்துள்ளது. ஆனால் வெளிநாட்டு நாணயத்தின் அடிப்படையிலான வைப்புக்களின் பெறுமதி ரூபாயின் அங்கீகாரம் காரணமாக கணிசமாகக் குறைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago