Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Gavitha / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
10 வருடங்களுக்கு முன்னர், தாம் தீர்வு காண வேண்டிய ஒரு சவால் காணப்படுவதாக நண்பர்கள் சிலர் உணர்ந்தனர்.
அதில் ஒருவர் தொலைதூர உறவைக் கொண்டிருந்த நிலையில், தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதற்கு மேற்கொண்டிருந்த சர்வதேச அழைப்புகள் காரணமாக அதிகளவு தொகையை செலவிட நேர்ந்தமை பற்றி கவலை கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் இணையத்தினூடாக இலவசமாக மொபைல்-மொபைல் அழைப்புகளை மேற்கொள்ளும் வகையில் 2010 டிசம்பர் 2ஆம் திகதி ஊதா நிறத்தில் app ஒன்று Viber எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த அறிமுகத்துடன், தொலைத்தொடர்பாடல் துறையில் Viber புரட்சியை ஏற்படுத்தி, உலகின் எப்பாகத்திலிருந்தும், அனைவருக்கும் எந்நேரத்திலும் இலவசமாக வரையறைகளற்ற காலப்பகுதிக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியை வழங்கியிருந்தது. அக்காலப்பகுதியில் இது உண்மையில் நம்ப முடியாத விடயமாக அமைந்திருந்தது.
10 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், மக்களை இலவசமாக இணைக்கும் இந்த சிறிய சிந்தனையானது, கடந்த தசாப்த காலப்பகுதியில் 1 ட்ரில்லியனுக்கும் அதிகமான அழைப்புகளை இலவசமாக மேற்கொள்வதற்கு உதவியாக அமைந்திருந்தது என்பதை நம்ப முடியாதுள்ளது. இந்த மொத்த அழைப்பு காலப்பகுயானது, ஒரு தொலைபேசி அழைப்பு தொடர்ச்சியாக 2 மில்லியன் வருடங்களுக்கு மேற்கொள்ளப்படுவதற்கு சமமானதாகும். நம்பமுடியாத ஆச்சரியமூட்டும் அம்சமாகும்.
இவ்வாறு தனது செயற்பாடுகளை ஆரம்பித்த Viber, துரிதமாக தகவல் பரிமாற்றத்தில் முன்னோடியாக வளர்ந்து, பாதுகாப்பான வகையில் சுமார் ட்ரில்லியன் கணக்கான தகவல் பரிமாற்றத்துக்கு ஏதுவாக அமைந்துள்ளது. Viber இல் பாவனையாளர்கள் தாம் தெரிவு செய்யும் நபர்களுடன் மாத்திரமே தமது விடயங்களை பகிர்ந்து கொள்கின்றனர் என்பதை உறுதியாக அறிந்திருக்க முடியும்.
கடந்த காலங்களில் chat, உரையாட மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள நாம் பல வழிமுறைகளை அறிமுகம் செய்திருந்தோம். இதனை நாம் உலகின் மிகவும் பாதுகாப்பான தகவல் பரிமாற்ற app எனும் ஸ்தானத்தை பேணுவதனூடாக உறுதி செய்துள்ளோம்.
“Privacy First” எனும் எமது பிரதான பெறுமதியின் பிரகாரம், பேச்சு சுதந்திரத்தை Viber உறுதி செய்கின்றது. இதன் காரணமாக 2016 ஆம் ஆண்டு முதல் எமது சகல private chatகள் மற்றும் அழைப்புகளில் end-to-end encryption ஐ நாம் நியமமாக உறுதி செய்துள்ளோம்.
Viber இல் end-to-end encryption எப்போதும் செயலில் இருக்கும். நீங்கள் Viber இல் chat செய்யும் போது, நீங்களும், மறுமுனையில் உங்களுடன் chat செய்பவருக்கும் மாத்திரமே உங்கள் தகவல்களை வாசிக்க முடியும். எமது பொறியியலாளர்களுக்கு கூட உங்களின் chatகள் மற்றும் அழைப்புகளை அணுக முடியாது. இதில் ஒரு போதும் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது.
கடந்த 10 வருடங்களில் Viber இன் அணி அங்கத்தவர்களின் எண்ணிக்கை 800 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இவர்கள் நிறுவனத்தின் பிரதான தூண்களாக அமைந்துள்ளனர்.
5G வலையமைப்புகளின் அறிமுகத்துடன் பெருமளவு வாய்ப்புகளை அணுகக்கூடியதாக இருக்கும் என்பதுடன், பெருமளவு புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய வழிகோலும். தினசரி Viber இல் AR, VR மற்றும் AI ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், எமது நிஜ மற்றும் டிஜிட்டல் வாழ்க்கைகள் எதிர்காலத்தில் பிணைப்படையும். எதிர்காலத்தில், இரு உலகுகளுக்கிடையிலான வேறுபாடுகள் மறைந்து, பாவனையாளர்களுக்கு நேரடியாக தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உணர்வுகளை, டிஜிட்டல் வாழ்க்கையினூடாகவும் பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
எவ்வாறாயினும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில், நாம் தொடர்ந்தும் தொடர்பாடலை எவ்வாறு இலவசமாக, பாதுகாப்பாக அனைவருக்கும் பிரத்தியேகமாக பேணுவது என்பதற்கான பதில் Interoperability.
Viber’ இன் வளர்ச்சியில் நீங்கள் முக்கிய பங்களிப்பு வழங்கியிருந்தீர்கள். உங்களுக்கு நன்றி. எமது பாவனையாளர்கள் Viber ஐ தெரிவு செய்தமைக்கு காரணம், பாதுகாப்பு, இலவசம் மற்றும் தமது முழு வெளிப்பாட்டையும் அழைப்புகள் மற்றும் தகவல்களில் பரிமாற முடிகின்றமையாலாகும்.
எமது வருட பூர்த்தியை முன்னிட்டு, Viber இன் Wheel of Fortune chatbot இல் பெருமளவு பரிசுகள் காத்திருக்கின்றன. எம்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
37 minute ago
1 hours ago