Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 07 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
31.12.2018
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் மெல்ஸ்டாகோர்ப் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 288 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் பெருமளவு ஈடுபட்டனர்.
01.01.2019
புதுவருடப்பிறப்பை முன்னிட்டு கொழும்பு பங்குப் பரிவர்த்தனை செயற்பாடுகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக கொழும்பு பங்குப் பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கவில்லை.
02.01.2019
சிலோன் டொபாக்கோ கம்பனி, லயன் பிரெவரி மற்றும் ஸ்ரீ லங்கா டெலிகொம் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் அ.ப.வி.சு நேர் பெறுமதியையும் S&P SL20 சுட்டி மறை பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 211 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, சம்பத் வங்கி மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ஜனசக்தி இன்சூரன்ஸ் கம்பனி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.
03.01.2019
டயலொக் அக்ஸியாடா, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 804 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.
04.01.2019
டிஸ்டிலரீஸ், ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 68 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. 2009 ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பதிவாகியிருந்த ஆகக்குறைந்த புரள்வுத் தொகைக்கு பின்னர் பதிவாகிய மிகவும் குறைந்த புரள்வுத் தொகையாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு மட்டுப்படுத்தப்பட்டளவில் பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ஹுனாஸ் ஃபோல்ஸ் ஹோட்டல்ஸ் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது.
வாரத்தில் அ.ப.வி.சு 0.87% உயர்வையும் S&P SL20 031% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 343 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago