2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வாராந்த பங்குச்சந்தை நிலைவரம் 04.06.2018 - 08.06.2018

Editorial   / 2018 ஜூன் 11 , மு.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

04.06.2018  

டயலொக் அக்ஸியாடா, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சிலிங்கோ இன்சூரன்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 771 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், காகில்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆகிய பங்குகளின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு பிரமல் கிளாஸ் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.   

05.06.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், நெஸ்லே லங்கா மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 680 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.  

06.06.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் பிராக் லங்கா ஃபினான்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 510 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி மற்றும் DFCC வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. மேலும், வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.  

07.06.2018  

லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி, டிஸ்டிலரீஸ் மற்றும் செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 545 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி, சிரி ஹோல்டிங்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, எயிட்கன் ஸ்பென்ஸ் ஹோட்டல் ஹோல்டிங்ஸ் மற்றும் பிரமல் கிளாஸ் சிலோன் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

08.06.2018  

ஸ்ரீ லங்கா ரெலிகொம், கொமர்ஷல் வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 326 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, மந்த கதியில் இடம்பெற்றிருந்ததுடன், கலப்பு ஈடுபாடு செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், சம்பத் வங்கி மற்றும் டோக்கியோ சீமெந்து கம்பனி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

வாரத்தில் அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன முறையே 0.72% மற்றும் 1.15% சரிவைப் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரிப் புரள்வு 567 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X