Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
18.02.2019
LOLC ஹோல்டிங்ஸ், டீஜே லங்கா, மெல்ஸ்டாகோர்ப் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 530 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. டோக்கியோ சீமெந்து கம்பனி வாக்குரிமை, வாக்குரிமையற்ற பங்குகள் மீது, சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்ததுடன், சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, சிங்ஹபுத்ர ஃபினான்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் பெருமளவு ஈடுபட்டனர்.
19.02.2019
நவம் போயா விடுமுறை காரணமாக, கொழும்பு பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கவில்லை.
20.02.2019
ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டல்ஸ், டிஸ்டிலரீஸ், கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 172 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.
21.02.2019
லயன் பிரெவரி, கொமர்ஷல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.0 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. கிங்ஸ்பரி, சிலோன் டொபாக்கோ கம்பனி, சம்பத் வங்கி ஆகிய பங்குகளின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, ஆசியா சியாகா கொமோடிட்டீஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்களின் ஈடுபாடு, பங்கு விற்பனையில் பதிவாகியிருந்தது.
22.02.2019
ஸ்ரீ லங்கா டெலிகொம், செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசுட்டி மறை பெறுமதியையும் S&P SL20 சுட்டி மாற்றமின்றியும் நிறைவடைந்திருந்தன. புரள்வு ரூ. 489 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி, டோக்கியோ சீமெந்து கம்பனி பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, டீஜே லங்கா பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.
வாரத்தில் அபவிசு 1.21% சரிவையும் S&P SL20 1.68% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 549 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago