Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
17.09.2018
டிஸ்டிலரீஸ், லயன் பிரெவரி மற்றும் செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 440 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு அம்பியன் ஹோல்டிங்ஸ் மற்றும் அம்பியன் கெப்பிட்டல் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.
18.09.2018
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டிஸ்டிலரீஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 881 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி, யூனியன் அஷ்யூரன்ஸ், செலான் வங்கி மற்றும் த கிங்ஸ்பரி ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு லங்கா ஒரிக்ஸ் ஃபினான்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.
19.09.2018
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், மெல்ஸ்டாகோர்ப் மற்றும் கொமர்ஷல் லசீங் அன்ட் ஃபினான்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 657 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. மெல்ஸ்டாகோர்ப், லயன் பிரெவரி, சம்பத் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு டிஸ்டிலரீஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு லங்கா ஒரிக்ஸ் ஃபினான்ஸ், எல்பி ஃபினான்ஸ் மற்றும் ரேணுகா ஃபுட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகம் ஈடுபட்டனர்.
20.09.2018
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், நெஸ்லே லங்கா மற்றும் மெல்ஸ்டாகோர்ப் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 547 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், நெஸ்லே லங்கா மற்றும் சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் டயலொக் அக்ஸியாடா பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.
21.09.2018
சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி மற்றும் குட் ஹோப் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 977 மில்லியனாக பதிவாகியிருந்தது. மெல்ஸ்டாகோர்ப், கொமர்ஷல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு யுனைட்டட் மோட்டர்ஸ் லங்கா பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு சியெர்ரா கேபிள்ஸ், எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் மற்றும் பிரவுண் அன்ட் கம்பனி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.
வாரத்தில் அ.ப.வி.சு 2.10% சரிவையும் S&P SL20 3.92% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 701 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
8 hours ago
24 Nov 2024