2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 15.01.2018 முதல் 19.01.2018

Editorial   / 2018 ஜனவரி 22 , மு.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

15.01.2018  

ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கல் விடுமுறை காரணமாக, திங்கட்கிழமை மேலதிக வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறவில்லை.  

16.01.2018  

கொமர்ஷல் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் ஸ்ரீ லங்கா ரெலிகொம் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைபெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூபாய் 884 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. 

ஹற்றன் நஷனல் வங்கி, சிலோன் கோல்ட் ஸ் ரோர்ஸ் மற்றும் சென்ரல் பினான்ஸ் அன்ட் கம்பனி மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, கொமர்ஷல் வங்கி மற்றும் டீஜே லங்கா மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் பெருமளவில் ஈடுபட்டனர்.

 

17.01.2018  

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், ஸ்ரீ லங்கா ரெலிகொம் மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைபெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 491 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஹற்றன் நஷனல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சம்பத் வங்கி மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, லங்கெம் டிவலப்மன்ட்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் பெருமளவில் ஈடுபட்டனர்.  

18.01.2018  

கொமர்ஷல் வங்கி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சிலோன் கோல்ட்  ஸ் ரோர்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைபெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.2 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு சம்பத் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு மெல்ஸ்டாகோர்ப் மற்றும் ரோயல் செரமிக்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவில் ஈடுபட்டனர்.  

19.01.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்ததுடன், புரள்வு ரூ. 1.6 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது. கொமர்ஷல் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி, சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் காகில்ஸ் ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு கொமர்ஷல் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள்  மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு செலான் டிவலப்மன்ட்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  
வாரத்தில் அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன முறையே 0.47% மற்றும் 0.84% சரிவைப் பதிவு செய்திருந்தன. சராசரி தினசரி புரள்வு 1.1 பில். ரூபாயாகப் பதிவாகியிருந்தது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X