Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 21 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
14.01.2019
டிஸ்டிலரீஸ், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், லயன் பிரெவரி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.4 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஹுனாஸ் ஃபோல்ஸ், கொமர்ஷல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், லயன் பிரெவரி ஆகிய பங்குகளின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ஜனசக்தி இன்சூரன்ஸ் கம்பனிப் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவு ஈடுபட்டனர்.
15.01.2019
தைப்பொங்கல் பொது, வர்த்தக வங்கி விடுமுறை காரணமாக கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கவில்லை.
16.01.2019
சிலோன் டொபாக்கோ ஸ்டோர்ஸ், கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு மறை பெறுமதியையும், S&P SL20 நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 950 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு சம்பத் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவு ஈடுபட்டனர்.
17.01.2019
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி, சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 341 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஹுனாஸ் ஃபோல்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு MTD வோல்கர்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.
18.01.2019
கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், மெல்ஸ்டாகோர்ப், எயிட்கன் ஸ்பென்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் அ.ப.வி.சு மறை பெறுமதியையும், S&P SL20 நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. புரள்வு ரூ. 660 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு லங்கெம் டிவலப்மன்ட்ஸ், MTD வோல்கர்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.
வாரத்தில் அ.ப.வி.சு 0.35% உயர்வையும் S&P SL20 0.98% உயர்வையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரித் தினசரி புரள்வு 860மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago