2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 11.02.2019 - 15.02.2019

Editorial   / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

11.02.2019  

கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், டிஸ்டிலரீஸ், ஸ்ரீ லங்கா ரெலிகொம் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் அ.ப.வி.சு மறை பெறுமதியையும் S&P SL20 சுட்டி நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ், காகில்ஸ் ஆகிய பங்குகளின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, கொமர்ஷல் வங்கி,  டீஜே லங்கா பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.  

12.02.2019  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சொஃப்ட்லொஜிக் லைஃவ் இன்சூரன்ஸ், சிலிங்கோ இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.0 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், செலிங்கோ இன்சூரன்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி ஆகிய பங்குகளின் மீது, சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, ஹற்றன் நஷனல் வங்கியின் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.  

13.02.2019  

அ.ப.வி.சு, S&P SL20 ஆகிய சுட்டிகள், விலை மாற்றமின்றி நிறைவடைந்தன. புரள்வு ரூ. 278 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. சிலோன் டொபாக்கோ கம்பனி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, மெல்ஸ்டாகோர்ப், டீஜே லங்கா, வலிபல் ஃபினான்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்குக் கொள்வனவில் ஈடுபட்டனர்.  

14.02.2019  

லயன் பிரெவரி, ஸ்ரீ லங்கா டெலிகொம்,  ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 160 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, லயன் பிரெவரி, ஜோன் கீல்ஸ் ஹோட்டல்ஸ், சம்பத் வங்கி ஆகிய பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்குக் கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.  

15.02.2019  

ஸ்ரீ லங்கா டெலிகொம், நெஸ்லே லங்கா,  கொமர்ஷல் வங்கி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 965 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.   

வாரத்தில், அ.ப.வி.சு 0.92% சரிவையும் S&P SL20 0.98% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 1.2 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X