2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 07.05.2018 - 11.05.2018

Editorial   / 2018 மே 14 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

07.05.2018  

சர்வதேச தொழிலாளர் தினம், மே மாதம் ஏழாம் திகதி அனுஷ்டிக்கப்பட்டதற்காக வழங்கப்பட்ட வர்த்தக, வங்கி பொது விடுமுறை காரணமாக, கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கவில்லை.  

08.05.2018  

டிஸ்டிலரீஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 601 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் கோல்ட் ஸ் ரோர்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி, சம்பத் வங்கி மற்றும் டயலொக் அக்ஸியாடா மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மீது பதிவாகியிருந்தது. பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் மீது, சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்குக் கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.  

09.05.2018  

நெஸ்லே லங்கா, டயலொக் அக்ஸியாடா மற்றும் சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.2 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. மெல்ஸ்டாகோர்ப், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா), சம்பத் வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, பிரவுண்ஸ் கெப்பிட்டல் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்குக் கொள்வனவில் ஈடுபட்டனர்.  

10.05.2018  

டிஸ்டிலரீஸ், லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி மற்றும் காசன் கம்பர்பெட்ச் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 618 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் டோக்கியோ சீமெந்து மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, லங்கா ஐஓசி மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.  

11.05.2018  

பிராக் லங்கா பினான்ஸ், டயலொக் அக்ஸியாடா மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதியைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 769 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனம்சார் ஈடுபாடு, டோக்கியோ சீமெந்து கம்பனி, சம்பத் வங்கி, சிலோன் கோல்ட் ஸ் ரோர்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் மெல்ஸ்டாகோர்ப் ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு, டீஜே லங்கா மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, லங்கா ஐஓசி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.   

வாரத்தில் அபவிசு மற்றும் S&P SL 20 ஆகியன முறையே 0.43% மற்றும் 0.50% சரிவைப் பதிவு செய்திருந்தன. சராசரி தினசரி புரள்வு ரூ. 802 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X