2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

பங்குச்சந்தை முதலீடுகள் முயற்சியாண்மையின் ஓர் அங்கம்

Editorial   / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்குச்சந்தை முதலீடுகளை முயற்சியாண்மையின் மறுவடிவமாக பார்க்கலாம். சிறப்பாக பங்குச்சந்தை முதலீடு, வியாபாரமுயற்சியின் தன்மை, தொடர்புடைய உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகள், சந்தைச்சூழல், வாடிக்கையாளர்கள் மற்றும் கம்பனியின் முகாமையாளர் தொடர்பில் முதலீட்டுத் தீர்மானத்​ைத எடுக்க முன்னர் மேற்குறிப்பிட்டவை பற்றி, முழுமையாக பகுப்பாய்வு செய்வதுடன் தொடர்புபடுகின்றது.

அதனைப்போன்றே முயற்சியாளன் தன்னிடமுள்ள வியாபாரத் திட்டத்துக்குச் செயல்வடிவத்​தைக் கொடுக்கின்ற போது, அத்திட்டத்துடன் இணைந்த வியாபாரச் செயற்பாடுகளைப் பகுப்பாய்வு செய்ய வேண்டியிருக்கும்.

பங்குமுதலீட்டுக்கும் முயற்சியாண்மைக்கும் உள்ள பாரிய வேறுபாடாக, பங்குமுதலீட்டைப் பொறுத்தவரையில், எமக்காக யாரோ ஒரு சில முன்னோடிகளினால், வியாபார முயற்சிக்குத் தேவையான அடிப்படைகளை நிறைவு செய்துள்ளமை​யை உணரமுடிகின்றது.

நாம் கம்பனியின் வியாபாரத்​தை முழுமையாக புரிந்துகொள்வதுடன், நான் கொண்டுள்ள ஒத்த சிந்தனையுடன், கம்பனியானது, நெறிப்படுத்தபடுவதனை அவதானிக்குமிடத்து, சந்தேகமின்றி அக்கம்பனியின் பங்குகளை கொள்வனவு செய்து பரபரப்பான, வியாபார முயற்சியில் எம்மை இயக்குனராக மாற்றிகொள்ள முடியும்.  

எப்படியாயினும், நாம் பங்குச்சந்தை முதலீட்டை முயற்சியாண்மையின் ஓர் அங்கமாக நோக்குகின்ற ஒரேயொரு சந்தர்ப்பத்தில் மட்டுமே பங்குச் சந்தை முதலீட்டை முயற்சியாண்மையுடன் ஒப்பிட்டு நோக்க முடியும். மாறாக, பரிமாற்றல் கருவியாக (Trading Instruments) நோக்குமிடத்து, அதன் பெறுமதி அல்லது விலைகள் காலத்துடன் இணைந்ததாக மாறிக்கொண்டு இருப்பதனை தவிர்க்க முடியாது.  

அடுத்த விலை அசைவினை எதிர்பார்த்து மீள் விற்பனையை நோக்காகக் கொண்டு பங்குகளை கொள்வனவு செய்தல் ஓர் முதலீட்டு (Investing) முயற்சி அல்லாமல், அது பங்குவியாபாரமாக (Trading) அமைந்து விடுகின்றது.

இங்கு ஆதிக்கவர்க்கம் (Majority shareholder) வியாபாரத்தின் அடிப்படைப் பெறுபேற்று அடைவுகளைக் கருத்தில் கொள்ளாது, தாம் கொண்டுள்ள திறமையினைப் பயன்படுத்தி ஊகவியாபாரத்​தை (betting or gambling) மேற்கொள்கின்றனர். இது முதலீடு அன்றி பரிமாற்றல் வியாபாரமாக மட்டுமே அமைகின்றது.   
பின்வரும் விசேட சிறப்பியல்புகளினால் முயற்சியாண்மையின் ஓர் அங்கமாக பங்குமுதலீடு அமையப்பெறுகின்றது.   

1. வியாபாரப் புரிந்துணர்வு:-  

பங்குகளில் முதலீடு செய்ய முன்வருகின்றபோது நீங்கள் கம்பனியின் வியாபாரமுயற்சி தொடர்பாக தெளிவான புரிந்துணர்வினை ஏற்படுத்திக் கொள்ள பங்குச்சந்தை உங்களை வேண்டி நிற்கின்றது. நீங்கள் நிச்சயமாக கம்பனி எவ்வாறான பொருள் அல்லது சேவையினை உற்பத்தி செய்கின்றது.

அவை எங்கே, எவ்வாறு உற்பத்தி செய்கின்றன, எவ்வகையான மூலப்பொருட்களை பயன்படுத்துகின்றன மற்றும் யார் யார் எல்லாம் அதன் வழங்குனராக உள்ளனர், போட்டியாளர்களின் போட்டித்தன்மை எவ்வாறானது, நிதிக்கிடைப்பனவு மற்றும் கையாளுகை தொடர்பாகவும் அறிந்திருத்தல் வேண்டும். 

இதே போன்ற ஒரு பகுப்பாய்வினை, முயற்சியாளன் வியாபார முயற்சியாண்மை தொடர்பில் வளங்களை இணைக்கின்ற போது மிகவும் உன்னிப்பாக ஆய்வு செய்ய வேண்டியிருக்கும். மாறாக அடிப்படை வியாபாரத் தந்திரோபாயங்களைக் கருத்தில் கொள்ளாது பங்குச்சந்தையில் முதலிடுதல், வர்ணப்பூச்சினை கற்பனை இன்றி கைபோன போக்குக்குத் தெளிப்பதாக அமைந்துவிடும்.

2. முதலீட்டுத் திரும்பல் அடிப்படை வியாபாரத்தின் பெறுபேறு:-

பங்குமுதலீடு மற்றும் முயற்சியாண்மை இரண்டும் அடிப்படையில் இடர்நேர்வுடன் (Risk) இரண்டறக் கலந்தவை. வியாபாரத்தின் வெற்றி மற்றும் தோல்வியுடன் நேரடியாத் தொடர்புபடுகின்றது.

ஆனால், வேறுபடுத்த முடியாது, மாறாக இழிவுபடுத்த முடியும். நீங்கள் தெரிவு செய்த கம்பனியின் வியாபார பெறுபேறானது சிறப்பாக அமையுமிடத்து, கம்பனி தனது வியாபாரத்தினை விருத்தி செய்வதுடன் உழைக்கப்பட்ட இலாபத்தை பங்குலாபமாக (Dividend) அதன் உரிமையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும்.

இது செல்வங்கள் பெருகுவதற்கான அடிப்படையாக அமைகின்றது. முயற்சியாண்மையும் இதற்கு விதிவிலக்கு அல்ல.  

3. அர்ப்பணிப்புடன் இணைந்த கடின முயற்சி:-

இந்த இரண்டு முயற்சிகளும் கடின உழைப்புடன் தொடர்புபட்டவை. முயற்சியாண்மையினைப் பொறுத்தமட்டில், வியாபாரத்​ைத தொடர்ச்சியாக சரியான பாதையில் இட்டுச்செல்ல வேண்டிய பக்குவம் அவசியம்.

அதற்கு முயற்சியாளன் தொடர்ச்சியாக, உற்பத்தி மட்டம், விற்பனைப்பெறுபேறு, நிதிநிலமைகள், தொழிலாளர்களின் வினைத்திறன் மற்றும் செலவுச்சிக்கனம் போன்றன கம்பனியின் ஆரோக்கிய நிகழ்வுகளில் கவனம் செலுத்த வேண்டும்.

அவ்வாறாகவே பங்குமுதலீட்டிலும் இவ்வாறான குறிகாட்டிகளை கம்பனிகளின் காலண்டு மற்றும் ஆண்டு அறிக்கைகளின் ஊடாக மற்றும் செய்தித்தாள், விசேட ஆய்வுக்குறிப்புகளின் உதவியுடன் அறிய முடிகின்றது.

எமது முதலீட்டுத் தேக்கத்தில் (Portfolio) அவ்வாறான கம்பனிகளை இனங்கண்டு நிரல்படுத்த அதிகளவாக நேரம் மற்றும் முயற்சி அவசியம் என்பதனை பங்குமுதலீடு உணர்த்திநிற்கின்றது.

பொதுவாக பல கம்பனிகளை பின்தொடர்வதைத் தவிர்த்து, விவேகமான சிந்தனைக்கு அமைவாக, எமது வசதிக்கு ஏற்றால் போல் குறித்த ஒரு சில கம்பனிகளை தெரிவுசெய்தல் நன்று. 

- இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு  

(மிகுதி அடுத்தவாரம் தொடரும்) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .