Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Johnsan Bastiampillai / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி, கொழும்பு தங்க நிலையம் (Gold Center) கிளையில் அமைந்திருந்த ATM இயந்திரத்தை காபோ லேன் நுழைவாயில் அருகே, வசதியான இடத்துக்கு மாற்றியுள்ளது. செலான் வங்கியின் விற்பனை, சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி காமிக டி சில்வாவும் வங்கியின் மெட்ரோ - II துணை பிராந்திய முகாமையாளர் சுரேஷ் சுப்ரம் ஆகியோரும் ATM இயந்திர கூடத்தை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தனர்.
செலான் வங்கி ATM, மக்களின் பார்வைக்குப்படும் இடத்தில் இப்பொழுது அமைந்துள்ளது. ஆகவே, இது வங்கியின் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்வதற்கான சிறந்த இடமாகவும் அமைகிறது. இப்பகுதியில் உள்ள வணிகர்களுக்கு வசதியாக, ATM இயந்திரம் தங்க மையத்தின் முக்கிய இடத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த இடம், அதிக வாடிக்கையாளர்களை உறுதிசெய்வதுடன், 24 மணி நேரமும் சுறுசுறுப்புடன் செயற்படும் நகரத்தின் மையத்தில், வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வசதியாக அமைகிறது.
மேலும், தமது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியான வங்கி அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக்கொண்ட செலான் வங்கி, வெள்ளவத்தையிலுள்ள கிளையை 445, காலி வீதி, வெள்ளவத்தை என்ற முகவரிக்கு மாற்றியுள்ளது. செலான் வங்கியின் பணிப்பாளர்/தலைமை நிர்வாக அதிகாரி கபில ஆரியரத்ன கிளையைத் திறந்து வைத்தார்.
புதிதாக இடமாற்றம் செய்யப்பட்ட கிளை, வாரநாள்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கொடுக்கல் வாங்கல்களுக்கு திறந்திருக்கும். மேலும், அதிகபட்ச வாடிக்கையாளர் வசதியை வழங்கும், பல்வேறு நவீன வங்கிச் சேவைகளையும் கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago