2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

சர்வதேச தரப்படுத்தல்களை சாதாரணமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது

Editorial   / 2018 மார்ச் 22 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

cable.co.uk எனும் இணைய தளத்தால் வெளியிடப்பட்ட புரோட்பான்ட் விலைக்கட்டண பட்டியலொன்றை உலகப் பொருளாதார மன்றத்தின் இணையதளம் குறிப்பிட்டு இருந்தது. இந்த மேற்கோள், ஆய்வுக்கு ஒரு நம்பகத்தன்மையை கொடுத்தாலும், தரப்படுத்தலுக்கு பின்னால் இருக்கும் வழிமுறை கேள்விக்குரியது.  

அண்மையில் cable.co.uk எனும் இணையத்தளத்தினால் புரோட்பாண்ட் விலைப்பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டது, மறுகணமே, அது உலக பொருளாதார மன்றத்துக்கான புற பங்களிப்பாளரால் ஓர் ஆய்வுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

முதலில் வெளியிடப்பட்ட அறிக்கை, நிலையான புரோட்பாண்டுக்கான விலை குறைந்த, கூடிய நாடுகளை அடையாளப்படுத்துவதுடன், சர்வதேச ரீதியாக அங்கிகாரம் பெற்ற ஒரு வழங்குனரை (சிறந்த வழங்குனர் என்ற கணிப்பில்) குறிப்பில் வைத்து, விலை குறைவான புரோட்பாண்ட் விலைபடுத்தலில் இலங்கை 17ஆவது இடத்தில் உள்ளது என்பதையும் கூறுகின்றது. 

ஆயினும், இந்த ஆய்வு இரு பொருத்தமற்ற தரவுகளை ஒப்பிடுவதை காணலாம், அத்துடன் cable.co.uk யினால் உபயோகப்படுத்தப்பட்டுள்ள வழிமுறை, உலகளவில் ஒப்பிடப்படக்கூடிய ஒன்றல்ல. ஏன், என்பதற்கான சில காரணிகள் பின்வருமாறு.

பல புரோட்பாண்ட் திட்டங்களைச் சராசரிப்படுத்தல், விலைகளைக் கோணலாக்கும்.   
காணப்படுகின்ற பல்வேறு திட்டங்களைச் சராசரிப்படுத்தல் புரோட்பாண்டின் விலை வெகுவாக கோணுவதற்கு வழிவகுக்கும். பொதுவாகக் கிடைக்கப்பெற்ற வழிமுறையின் அடிப்படையில், ‘ஒவ்வொரு வேக அளவிலும் மிக அடிப்படையான பொதி தெரிவுசெய்யப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளது. 

வழங்குனர்கள் கோட்பாட்டளவிலான தங்களின் உச்ச வேகத்தை, விளம்பரப்படுத்துவது வழக்கமான ஒன்றாகும். இலங்கையின் நிலையான வழங்குனரான இலங்கை டெலிகொம், அதன் அனைத்து ADSL திட்டங்களையும் 21Mbps வரையிலான வேகத்தை கொண்டுள்ளது என்றும், அனைத்து இழைய அடிப்படையிலான திட்டங்களையும் 100Mbps வரையிலான தரவிறக்க வேகத்தை கொண்டுள்ளது என்றும் விளம்பரப்படுத்துகின்றது.

ஆயினும், விலை வித்தியாசம் மிக அதிகமானது. மிக அடிப்படையான ADSL திட்டத்தின் விலை ரூபாய் 450.00 (‘வெப் லைட்’ அண்ணளவாக $2.89 வரியில்லாமல்), விலை குறைந்த இழைய அடிப்படையிலான பொதி ரூபாய் 1,490 ஆகும் (‘வெப் பமிலி பிளஸ்’ அண்ணளவாக $9.57 வரியில்லாமல்). இதன் அடிப்படையில் ஆரம்ப விலையானது $2.89 ஆக இருக்க வேண்டும் (வரியில்லாமல்). ஆனால், cable.co.uk இதை $19.93 ஆக குறிப்பிடுகின்றது.   

இந்த ஆய்வின் நோக்கம் ஆரம்ப விலைகளை ஒப்பிடுவதாக இருந்தால், இல்லாவிட்டால் cable.co.ukஇன் ஆய்வாளர்கள் குறிப்பிடுவதைப் போல “இணைப்பில் இணைவதற்கான செலவு” என்றால் ஏன் விலைகள் சராசரிப்படுத்தப்பட்டுள்ளன? மின்னஞ்சல் வாயிலாக வினவிய போது, cable.co.uk ற்கான வாடிக்கையாளர் தொலைத்தொடர்பாடல் நிபுணரான டான் ஹவ்டல் அவர்கள், பல்வேறுப்பட்ட விலைகள் சராசரிப்படுத்தப்பட்டதற்கான காரணம் “இணைதல் கட்டணத்திற்கான” நியாயமான ஒரு ஒப்பிடல் காணப்படவில்லை என்று கூறுகின்றார். 

ஆனாலும் “உள்ளீட்டு நிலை” எவ்வாறு கணிக்கப்படுகின்றது என்பதைக் குறித்த தீர்மானம் சர்வதேச தொலைதொடர்ப்பாடல் சங்கத்தினால் பயன்படுத்தப்படும் வழிமுறையில் இருந்து பெற்றுக் கொண்டிருக்கலாம். மாதாந்தம் குறைந்தது 1GB ஐ குறைந்தளவு வேகத்தில் வழங்கும் திட்டங்கள் ஒரு நியாயமான ஒப்பீட்டை வழங்கியிருக்கும்.   

வரிகளை உள்ளடக்காமல் விடுதல்   

இங்கு பயன்படுத்தப்பட்ட வழிமுறையானது, வரிப் பிரச்சனையைக் குறித்து தெளிவாகப் பேசவில்லை. வெளிப்படையாக இருக்கும் தரவு அறிக்கை, உதாரணத்தின் அடிப்படையில், அதைக் குறித்த எந்தவொரு குறிப்பும் இல்லை. வாடிக்கையாளர் செலுத்தும் உண்மையான கட்டணத்தை, அந்தத் தரப்படுத்தல் கணக்கில் கொண்டிருக்கும். தென் ஆசிய நாடுகளில் மாத்திரம் தொலைத்தொடர்பு வரி வீதங்கள் 0-32 வரை காணப்படுகின்றன. இது வாடிக்கையாளர் செலுத்தும் கட்டணத்தை வெகுவாகப் பாதிக்கும். அத்துடன் “இணையத்தில் இணைவதற்கான கட்டணத்தை” ஒப்பிடவேண்டுமெனின் வரியானது சேர்க்கப்பட வேண்டும். 

சரிக்கு சரியாக ஒப்பிடுதல்   

ஒரு நாட்டிலுள்ள ஒரு பொருளை, இன்னுமொரு நாட்டின் அதே பொருளின் விலையுடன்,  அடிப்படையில் ஒப்பிட முடியாது. இது மிகத் தவறான விளைவுகளைப் பிறப்பிக்கும். எனவே கொள்வனவு ஆற்றல் சமநிலை, பிக்மக் தரப்படுத்தல் போன்ற கோட்பாடுகள் அவசியமாகும். 

cable.co.uk யினால் பயன்படுத்தப்பட்ட வழிமுறையானது, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பல்வேறுப்பட்ட நிலையான புரோட்பாண்ட் திட்டங்களின் சராசரி விலைகளை அமெரிக்க டொலருக்கு மாற்றியுள்ளதாகும்.

இன்னும் தெளிவு பெற, பல்வேறு புரோட்பாண்ட் விலைகளின் சராசரிகளின் அடிப்படையில் cable.co.uk இன் தென் ஆசிய நாடுகளின் தரப்படுத்தலை குறிக்கும் அட்டவணை 1 ஐ கவனிக்குக. இதன் அடிப்படையில் தென் ஆசியாவில் விலை குறைந்த புரோட்பாண்ட் சேவை முதலாவது நேபாளமிடமும் அடுத்தது இலங்கையிடமுமே உள்ளது. 

இதன் அடிப்படையில் தென் ஆசியாவில் விலை குறைந்த புரோட்பாண்ட் சேவை முதலாவது நேபாளமிடமும் அடுத்தது இலங்கையிடமுமே உள்ளது.   

அட்டவணை -2 சற்று மாறுப்பட்ட வழிமுறையை பின்பற்றும் தரப்படுத்தலை வழங்குகின்றது. உள்ளீட்டு நிலை புரோட்பாண்ட் திட்டங்களின் விலையானது (அதிகப்படியான சந்தைப் பங்கை கொண்ட சேவை வழங்குனர் வழங்கும் சேவையின் அடிப்படையில் ஒரு நாடுக்கு ஒன்று என்ற வீதத்தில்) மொத்த தேசிய வரவின் தலா வீதமாக வழங்கப்படுகின்றது (உலக வங்கி 2016, அட்லஸ் முறைமை) இந்த முறைமையானது ITU ICT இன் விலை கூடை முறைமையில் இருந்து கிடைக்கப்பெற்றாதாகும்.

இங்கு விலைகள் ஒவ்வொரு நாட்டிலும் அறவிடப்படும் வரிகளை உள்ளடக்குவதால், அது வாடிக்கையாளர் செலுத்தும் கட்டணங்களைச் சரியாக காட்டுகின்றது. இந்த எளிமையான ஒப்பீடானது போட்டியை சமநிலைப்படுத்துகின்றது. அத்துடன் உலகளவில் ஒப்பிடப்படுவதற்கான தகுதியையும் வழங்குகின்றது.

 அட்டவணை 2,  தென் ஆசிய பொருளாதாரங்களில் அதிகளவான சந்தைப் பங்கைக் கொண்டுள்ள சேவை வழங்குனரால் வழங்கப்படும் சேவையின் அடிப்படையிலான புரோட்பாண்ட் விலைகட்டணம். (தரவு LIRNEasia வினால் நவம்பர் 2017 சேகரிக்கப்பட்டது) மேலும் சர்வதேச ரீதியான ஒப்பிடலைச் செய்யும்பொருட்டு GNI p.c. இன் ஒரு வீதமாக முன்வைக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு நாட்டிலும் அதிகளவான சந்தைப் பங்கை கொண்டுள்ள சேவை வழங்குனர் தெரிவுசெய்யப்பட்டனர். அதன் பிறகு விளம்பரப்படுத்தப்பட்ட குறைந்தது 256 Kbps வேகத்தை கொண்ட உள்ளீட்டு நிலை திட்டத்துக்கான கட்டணம் தெரிவுசெய்யப்பட்டது. (புரோட்பாண்டுக்கான ITU வின் வரைவிலக்கணத்தின் அடிப்படையில்) இந்த வழிமுறையின் அடிப்படையில் மாலைதீவானது (cable.co.uk இனால் தென் ஆசியாவில் விலைக்கூடியதாக தரப்படுத்தப்பட்ட நாடு) தென் ஆசிய பொருளாதாரங்களில் இரண்டாவது விலை குறைந்த உள்ளீட்டு நிலை, நிலையான புரோட்பாண்ட் பொதியை கொண்டுள்ளது.

 இலங்கை இதில் முதல் இடத்தை பிடிக்கின்றது. நேபாளம் (cable.co.uk இனால் விலை மிக குறைவாக கணிக்கப்பட்ட நாடு) தென் ஆசியாவில் ஐந்தாவது விலை குறைந்த இடமாக காணப்படுகின்றது   
குறியீடுகள் தற்சார்புடையதாக இருக்கலாம். அத்துடன் ஒன்றே எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்ற முடிவுக்கு வருதல் சாத்தியமற்றதாகும். பயன்பாட்டு மாற்ற முடிவுகளானது, குறைவான அல்லது அதிகப்படியான வழிமுறை ரீதியான தவறை கொண்டிருக்கும் குறியீடுகளை வடிவமைக்கும் போது எடுக்கப்படுகின்றது. 

இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னும் யதார்த்தமான ஒப்பீட்டை பெறுவதற்கான வழிமுறைகள் உண்டென்று தெளிவாக விளங்குகின்றது. அது இந்த தரப்படுத்தலின் நம்பத்தக்க நிலையை அதிகரித்து இருக்கும். 

- ஷஸ்னா சுஹில்   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X