Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 16 , பி.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நுண், சிறு மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களினூடாக (MSMEs) 2.25 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு தொழில்வாய்ப்புகள் வழங்கப்படுவதுடன், இதில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வியாபாரங்கள் காணப்படுகின்றன. கொவிட்-19 தொற்றுப்பரவலுடன், பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், சவால்கள் நிறைந்த சூழலிலும் பல சிறு வியாபாரங்கள் மீண்டெழுந்திறனுடன் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தன.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுக்குழு மற்றும் கிறிசலிஸ் ஆகியன இணைந்து, உள்ளடங்கலான மீண்டெழுந்திறன் மிக்க வியாபாரங்களை வளர்த்தல் எனும் தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த இணையக் கலந்துரையாடலின் போது, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த நான்கு தொழில் முயற்சியாளர்கள் சவால்களை வாய்ப்புகளாகப் பயன்படுத்தி தமது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தமை தொடர்பில் கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர்.
இந்த இணையக் கருத்தரங்கில், எஸ்ஜிஎம் ஃபுட் புரொடக்ட்ஸ் உரிமையாளர், சரவணகுரு சிவதர்சன், அரலிய ஃபஷன் வெயார் உரிமையாளர் அரலிய சமரசேகர, யுனிகுரோ ஏஜென்சி உரிமையாளர் உஷா நந்தினி செந்தில் குமார் மற்றும் சுராங்கனி வொலன்டரி சேர்விசஸ் தேசிய பிரதிநிதி நளின் விபுலேந்திர ஆகியோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கின் வளவாளராக கிறிசலிஸ் அமைப்பின் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் ஹஷித அபேவர்தன கலந்து கொண்டார்.
ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் உப தலைமை அதிகாரியும் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளருமான ஃபப்ரிசியோ செனெசி கருத்துத் தெரிவிக்கையில், “நுண், சிறு மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களினூடாக (MSMEs) அடங்கலாக இலங்கையின் பொருளாதாரத்துக்கு உதவிகளைப் பெற்றுக் கொடுப்பது எமது முக்கியத்துவம் வாய்ந்த முன்னுரிமையாகும்.
“இந்த நிகழ்வினூடாக, துறையில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்ததுடன், நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கும் உள்நாட்டு வியாபாரங்களை ஊக்குவிக்கவும் முடிந்தது. பொருளாதாரத்தில் கொவிட் தாக்கம் பாரதூரமானது. ஆனாலும், புதிய சிந்தனை மற்றும் மீண்டெழுந்திறனுடன், முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை பயில முடியும். பெண்களால் முன்னெடுக்கப்படும் வியாபாரங்களுக்கு இடைவெளிகளையும் தடைகளையும் கொவிட் ஏற்படுத்தியிருந்தது.
“இந்த கருத்தரங்கினூடாக பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு அதிகளவு ஊக்குவிப்பு வழங்கப்பட்டிருந்தது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago