2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

அரசாங்க கடன் பிணையங்கள் பற்றி அறிமுகம்

Editorial   / 2019 ஏப்ரல் 01 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-(கடந்த வாரத் தொடர்ச்சி) 

முதலாந்தரச் சந்தை (Primary Market)   

அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு திறைசேரி பிணையங்களை விற்பனை செய்து, பணம் திரட்டி கொள்ளும் சந்தையானது, முதலாந்தரச் சந்தை எனப்படும்.

இந்த முதலாந்தரச் சந்தையில் பிரதானமான பங்குப் பற்றுநர்களாக முதலாந்தர வர்த்தகர்கள் (Primary Dealers) காணப்படும், அதேவேளை முதலாந்தரச் சந்தையானது, ஏலவிற்பனை முறைக்கமைய செயற்படுகின்றது.  

முதலாந்தர வர்த்தகர்கள் (Primary Dealers)  

இலங்கை மத்திய வங்கியால், முதலாந்தர சந்தையில் பங்குபற்றுவதற்கு, அனுமதியளிக்கப்பட்ட நிறுவனங்கள் முதலாந்தர வர்த்தகர்கள் எனப்படுவர். தற்போது அனுமதிக்கப்பட்ட முதலாந்தர வர்த்தர்கள் 15 பேர் உள்ளனர். இதில் இரண்டு நிறுவனங்கள் வியாபாரம் செய்வதிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவ்விரண்டு நிறுவனங்களும் தவிர்ந்த மற்றைய 13 நிறுவனங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  

Bank Of Ceylon (Primary Dealer Unit)  

Capital Alliance Limited  

Entrust Securities PLC  

Commercial Bank Of Ceylon PLC (Primary Dealer Unit)  

First Capital Treasuries PLC  

Acuity Securities Limited  

Nat wealth Securities Limited  

NSB Fund Management Company Limited   

People ‘s Bank (Primary Dealer Unit)  

Sampath Bank PLC (Primary Dealer Unit)  

Seylan Bank PLC (Primary Dealer Unit)  

Wealth Trust Securities Ltd  

Union Bank Of Colombo PLC (Primary Dealer Unit)  

முதலாந்தர வர்த்தகர்களது பிரதான செயற்பாடானது, அரச கடன் திணைக்களத்தால் நடத்தப்படும் முதலாந்தர ஏலவிற்பனையில் பங்கெடுப்பது திறைசேரிப் பிணையங்கள் தொடர்பாக இரண்டாம் தரச் சந்தையில் கொடுக்கல் வாங்கல் செய்வதுமாகும்.  

முதலாந்தர ஏலவிற்பனை (Primary Auction)  

அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு அரச பிணையங்களைச் சந்தைப்படுத்தும் ஏல விற்பனையானது, முதலாந்தர ஏல விற்பனை எனப்படும். அரசாங்கத்தின் நிதித் தேவைப்பாட்டுக்கமைய மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு தடவைகள், திறைசேரி முறிகளின் ஏலவிற்பனை நடைபெறும். ஏலவிற்பனை அறிவித்தல் ஆகக் குறைந்தது, ஏலவிற்பனை தினத்துக்கு இரண்டு நாள்கள் முன்பதாக பிரபல்யமான பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும்.  

முதலாந்தர ஏலவிற்பனையின் மூலம், திறைசேரி பிணையங்களை கொள்வனவு செய்வதற்கு விரும்பும் அனைத்து முதலீட்டாளர்களும் தமது விலைக்கோரல்களை (Bids) முதலாந்தர வர்த்தகர்களினூடாக ஏலவிற்பனை தினத்தில் முற்பகல் 11.00 மணிக்கு முன்பதாக மத்திய வங்கிக்கு சமர்ப்பித்தல் வேண்டும். 

முதலாந்தர வர்த்தகர்கள் தமது விலைக் கோரல்களை தன்னியக்க இலத்திரனியல் வலையமைப்பு முறைக்குள் உட்செலுத்துவர். இதற்கமைய திறைசேரி பிணையங்களைக் கொள்வனவு செய்வதற்கு விரும்பும் முதலீட்டாளர் ஒருவர், முதலாவதாக, முதலாந்தர வர்த்தகர் ஒருவரைச் சந்தித்து தனது கட்டளையை அந்த முதலாந்தர வர்த்தகருக்கு கொடுத்தல் வேண்டும்.

முதலாந்தர வர்த்தகரால், இவ்வாறு முதலீட்டாளர்களிடமிருந்து சேர்க்கப்பட்ட கட்டளைகள் மற்றும் அதற்கு மேலாக முதலாந்தர வர்த்தகருடைய நிதியைப் பயன்படுத்திக் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கும் கட்டளைகள் அனைத்ததையும் மத்திய வங்கியின் முதலாந்தர ஏல விற்பனைக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் முதலாந்தர வர்த்தகரால் சமர்பிக்கக்கூடிய ஆகக் குறைந்த விலை கோரல் ரூ. 5 மில்லியனாகவும் அதற்கு அதிகமான விடத்து அந்த அதிகரித்த பெறுமதியானது ரூ. 1 மில்லியனின் மடங்காயிருத்தல் வேண்டும்.  மத்திய வங்கியால் விலைக்கோரல்கள் கீழிறங்கும் முறையின் கீழ் பெறப்படும்.

எனவே, ஏல விற்பனைக்கு முன்வைக்கப்பட்டுள்ள பிணையங்கள் தொடர்பாகக் கிடைக்கும் உயர்ந்த விலைக்கோரல், விலையிலிருந்து தொடங்கி அரசாங்கத்தால் பெற்றுகொள்வதற்கு விருப்பமான நிதித் தொகை வரைக்கும் விலைக்கோரல்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.  

-இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு    

(முற்றும்)  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X