2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

அரச துறை ஊழியர்களின் திறன் விருத்திக்கான தேவை

ச. சந்திரசேகர்   / 2019 ஜூலை 24 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் அரச துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு மேலதிக பயிற்சிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக, ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து 420 மில்லியன் ரூபாய் நன்கொடையை, இலங்கை அரசாங்கம் பெற்றிருந்தது. இலங்கையின் அரச துறையில் தற்போது 1.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வரும் நிலையில், பல நாடுகள் இந்தத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு பயிற்சிகளைப் பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளன. இது வரவேற்கத்தக்க விடயமாகும். 

எவ்வாறாயினும் நாட்டுக்கு போதியளவு வருமானத்தை பெற்றுக் கொடுப்பதற்காக அரச துறை அவசர தேவை அடிப்படையில் தனது நிபுணத்துவத்தை உயர்த்த வேண்டியுள்ளதுடன், வினைத்திறனை மேம்படுத்த வேண்டியுள்ளது.   

அண்மையில் வெளியிடப்பட்டிருந்த தொகைமதிப்பு புள்ளி விவர தகவல்களின் பிரகாரம், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில், படை வீரர்கள் தவிர்ந்த சுமார் 1,109, 475 பேர், அரச, பகுதியளவு அரச துறைகளில் பணியாற்றியிருந்தனர். இதில், 65.3 சதவீதமானவர்கள் மத்திய அரசாங்கத்தில் பதவி வகித்ததுடன், 34.7 சதவீதமானவர்கள் மாகாண சபைகளில் பதவி வகித்திருந்தனர்.   

இந்த அறிக்கையின் பிரகாரம், மொத்த அரச ஊழியர்களால் 55.1 சதவீதமானவர்கள் ஆண்களாகவும் 44.9 சதவீதமானவர்கள் பெண்களாகவும் காணப்பட்டனர். மத்திய அரசாங்கம், மாகாண அரச துறை ஆகியவற்றை வேறாக நோக்கும் போது, இந்தச் சதவீதங்களில் தெளிவான வித்தியாசங்களை அவதானிக்க முடியும். மாகாண மட்ட அரச துறையில், 61.6 சதவீதமானவர்கள் பெண்களாக காணப்படுவதுடன், மத்திய அரசாங்க துறையில், 64 சதவீதமானவர்கள் ஆண்களாக அமைந்துள்ளனர்.   

பொருளாதார இலக்குகளை ஊக்குவிக்கும் வகையில், இந்த அரச ஊழியர்களின் தகைமைகள் பொருத்தமானவையாக அமைந்துள்ளனவா என்பது தொடர்பிலும் கேள்விகள் எழுந்துள்ளன. உதாரணமாக, அரச ஊழியர்களில் 35 சதவீதமானவர்கள் மாத்திரமே, .பொ. உயர் தர பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர் என தொகை மதிப்புப் புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கின்றது.   

அதுபோன்று, அரச, பகுதியளவு அரச துறையைச் சேர்ந்த நான்கு ஊழியர்களில் ஒருவர் மாத்திரமே பட்டதாரியாக அமைந்துள்ளார். சுமார் 290,000 பட்டதாரிகளில், அரைப் பங்குக்கும் அதிகமானவர்கள் கலைப் பிரிவில் தமது அடிப்படை பட்டத்தைப் பெற்றுள்ளனர். அவ்வாறே, மொத்த ஊழியர்களில் 14 சதவீதமானவர்கள் மாத்திரம் தமது பட்டத்தை முகாமைத்துவம் /வணிக பிரிவில் பெற்றுள்ளதுடன், 10 சதவீதமானவர்கள் மாத்திரமே விஞ்ஞான பிரிவில் பட்டத்தைப் பெற்றுள்ளனர்.   

குறிப்பாக இலங்கை அபிவிருத்தியடைந்து வரும் நாடு எனும் வகையில், கொள்கை நடைமுறைப்படுத்தலுக்கு இது மாபெரும் சவாலாக அமைந்துள்ளதுடன், வயது முதிர்வடைந்து செல்லும் சனத்தொகை அதிகரிக்கும் நிலையில், அபிவிருத்தி செயன்முறையின் ஆரம்ப கட்டத்தில் புத்தாக்கம், ஆய்வு, அபிவிருத்தி ஆகியவற்றை உட்செலுத்த வேண்டும். 

நாட்டின் அபிவிருத்தித் தேவைகளுடன் அரச துறை ஊழியர்களின் தகைமைகள் பொருந்தாத நிலை காணப்பட்டால், தாராளமயமாக்கல், முதலீட்டு சூழலை மேம்படுத்தல், துறை அடிப்படையிலான கொள்கைகளை நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றுடன் அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இதர செயற்பாடுகள் போன்ற பாரிய பொருளாதார மீளமைப்பு செயற்பாடுகள், மிகவும் சவால்கள் நிறைந்தவையாக அமைந்திருக்கும்.   

இலங்கையின் பொருளாதாரத்தை குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியடையச் செய்வதற்கு புத்தாக்கம், ஆய்வுகள்,  அபிவிருத்தி, தொழில்நுட்பம் போன்ற வியாபாரத்துடன் தொடர்புடைய விடயங்கள், வெவ்வேறு பொருளாதார சூழல் தொடர்பில் ஆழமான அறிவை கொண்டிருக்க வேண்டும்.   

புதிய போக்குகள், சர்வதேச நிகழ்வுகள், இலங்கைக்கு காணப்படும் வாய்ப்புகள் ஆகியவற்றை அரச அதிகாரிகளுக்குப் புரிந்து கொள்ள முடியாமை என்பதனூடாக, நடைமுறைப்படுத்தலில் இடைவெளி ஏற்படுத்தப்பட்டு, சீர்திருத்தங்களில் தாமதம், வினைத்திறனில் வீழ்ச்சி போன்றன ஏற்படும். இலங்கை தாராளமயமாக்கம், புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடல், கட்டணங்களைக் குறைத்தல், ஏற்றுமதி, முதலீடுகளை ஊக்குவித்தல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தும் நிலையில், தகைமைகள்,  திறன்களில் அரச ஊழியர்களின் வளர்ச்சிக்கு பெருமளவு வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்படும்.   

அரச, பகுதியளவு அரச துறை ஊழியர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவு, பயன்பாடு போன்ற தகவல்களும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்தத் தொகை மதிப்பு புள்ளி விவர அறிக்கையின் பிரகாரம், மொத்த ஊழியர்களில் 66.8 சதவீதமானவர்கள் மாத்திரம் கணினியைப் பயன்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தனர். இதில் 56.3 சதவீதமான ஊழியர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதுடன், 38.4 சதவீதமான ஊழியர்கள் மாத்திரமே மின்னஞ்சலை பயன்படுத்துகின்றனர்.   

இதனூடாக இலங்கை அரசாங்கம் முனையும் கடதாசி பாவனையற்ற சேவைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் காணப்படும் பாரியளவு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X