Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமானா வங்கி, தனது Self Banking Zoneஐ, தெஹிவளை கிளையில் அறிமுகம் செய்துள்ளது. தமது வாடிக்கையாளர்களுக்கு, சௌகரியமான சுய-வங்கியியல் அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், இந்த அறிமுகத்தை மேற்கொண்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு தினசரி வங்கிசார் கொடுக்கல்-வாங்கல்களான பண மீளப் பெறுகைகள், பண வைப்புகள், கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் போன்றவற்றை இந்த Self Banking Zone ஊடாக இலகுவாக மேற்கொள்ள முடியும் என்பதுடன், புதிதாக நிறுவப்பட்டுள்ள Self Banking Kiosk ஊடாக, மேலும் பல கொடுக்கல் வாங்கல்களை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள முடியும்.
Self Banking Kioskஇனால் வாடிக்கையாளர்களுக்கு இணைய வங்கிச்சேவைகள், e-அறிக்கைகள், SMS அலேர்ட்ஸ் போன்றவற்றுக்கு பதிவு செய்துகொள்ள முடியும் என்பதுடன், டெபிட் அட்டைக்கு விண்ணப்பிக்கவும் முடியும். மேலும், டெபிட் அட்டைகளுடன் தொடர்புடைய செயற்பாடுகளான புதிய கணக்குகளை அட்டையில் இணைத்தல், PIN குறியீட்டை மாற்றிக் கொள்ளல், எல்லைப் பெறுமதிகளை மேம்படுத்திக் கொள்ளல் போன்றவற்றையும் மேற்கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago