2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

விபத்தில் பெண் பலி

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூன் 20 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், பிங்கிரிய - தும்மலசூரிய வீதியின் பஹல திம்பிரிவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ள இவ்விபத்தில், திகன்வெவ வெல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த என். பி. சோமாவதி (வயது 80) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தும்மலசூரிய திசையிலிருந்து பிங்கிரிய நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி, அதன் சாரதியினால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் கவிழ்ந்து புரண்டதில் முச்சக்கரவண்டியின் பின்னால் அமர்ந்து பயணித்த பெண்ணே, இவ்வாறு உயிரிழந்துள்ளாரென, பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பெண், பலத்த காயங்களுடன் பிங்கிரிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .