2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Editorial   / 2017 செப்டெம்பர் 26 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின், முஹம்மது முஸப்பிர்

ஆராச்சிக்கட்டுவ, நல்லதரன்கட்டுவ, அத்தங்கனய வீதியில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற விபத்தில், நல்லதரன்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த பீ. பிரேன்சிஸ் (வயது 67) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளாரெனவும் ஒருவர் காயமடைந்துள்ளாரெனவும், ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஆராச்சிக்கட்டுவ, நல்லதரன்கட்டுவ பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த டிப்பர், எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற குறித்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .