2025 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஐ.ம.ச பிரதேச சபை உறுப்பினர் பலி

Editorial   / 2024 செப்டெம்பர் 22 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

அனுராதபுரம்-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி அலபத்தாவ சந்தியில் ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை  கார் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பிரதேச சபை உறுப்பினர் படுகாயம் அடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தானை- பத்தாவ பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான  கே.எம்.றிஸ்வான் (42 வயது) எனவும் தெரிய வருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை படுகாயமடைந்தவர் ஜக்கிய மக்கள் சக்தியின் ஹொரவ்பொத்தானை  அமைப்பாளரான  நிக்கவெவ  பகுதியைச் சேர்ந்த என்.எம்.பாசில் ஆசிரியர் எனவும் தெரியவருகிறது.

 

விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X