Editorial / 2018 ஏப்ரல் 20 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
மாரவில, நாத்தாண்டிய உடுபந்தாவ வீதியின், துன்கன்னாவ பகுதியில், நேற்று வியாழக்கிழமை (19) மாலை இடம்பெற்ற விபத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
உடுபந்தாவ, துன்கன்னாவ பகுதியைச் சேர்ந்த தினேஷ் மதுசங்க (வயது 19) எனும் இளைஞனே, இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
உடுபந்தாவையில் இருந்து நாத்தாண்டிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர் திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில், இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இவ்விபத்தில், குறித்த இரு மோட்டார் சைக்கிள்களையும் செலுத்திச் சென்ற இருவரும், படுகாயமடைந்த நிலையில், மாரவில வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்தவரின் சடலம், மாரவில வைத்தியசாலையின், பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, விபத்தில் படுகாயமடைந்த மற்றைய நபர், மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
6 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago
14 Dec 2025