Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
முஹம்மது முஸப்பிர் / 2017 ஜூலை 11 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தும்மலசூரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மலசூரிய குளியாபிட்டி பிரதான வீதியின் கட்டமஹன தேவாலயத்துக்கு அருகில் முச்சக்கர வண்டியொன்றும் டிப்பரொன்றும் மோதிக்கொண்டதில் இடம்பெற்ற விபத்தில், முச்சக்கர வண்டியின் சாரதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு உயிரிழந்துள்ளாரென, தும்மலசூரிய பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுத் திங்கட்கிழமை மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் கெபல்லவ, சாப்புவத்தை எனும் பிரதேசத்தைச் சேர்ந்த சுனிமல் (வயது 26) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
தும்மலசூரிய திசையிலிருந்து குளியாபிட்டி திசை நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி, குளியாபிட்டி திசையிலிருந்து வந்த டிப்பருடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் முச்சக்கர வண்டியின் சாரதி, பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என்பதுடன் அதில் பயணித்த மற்றொருவரும் குளியாபிட்டி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட போதிலும் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.
இளைஞரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை, குளியாபிட்டி வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது.
விபத்துடன் தொடர்புடைய டிப்பரின் சாரதியும் காயங்களுக்குள்ளாகி துனகதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பில் அவர் தும்மலசூரிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தும்மலசூரிய பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
51 minute ago