2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

விபத்தில் இளைஞன் பலி ; சாரதி தப்பியோட்டம்

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூன் 21 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரம்பை - உடப்பு பிரதான வீதியின் மணிகாரன் பாதையில் பெருக்குவட்டான பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிழந்துள்ளாரென, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில், கொத்தாந்தீவு-கொலனியைச் சேர்ந்த 19 வயதுடைய முகமட் சப்ரான் என்ற இளைஞன் ஸ்தலத்திலேயே உயிழந்துள்ளார்.

உடப்பில் திசையிலிருந்து கரம்பை திசையை நோக்கிச் சென்ற சிறிய ரக கெப் வாகனமும் கரம்பை திசையிலிருந்து கொத்தாந்தீவு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சடலத்தின் மீதான பிரேத பரிசோதனை, புத்தளம் ஆதார வைத்தியசாலையில், நேற்று இடம்பெற்றதாக, புத்தளம் பிரிவுக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் தெரிவித்தார்.

விபத்துடன் தொடர்புடைய கெப் வாகனத்தைப் பொலிஸார் கைப்பற்றியுள்ள நிலையில், அதன் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளாரெனவும் அவரைத் தேடிக் கைதுசெய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .