2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வான் விபத்தில் 7 பேர் காயம்

Editorial   / 2019 செப்டெம்பர் 23 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரன் பிரியங்கர

புத்தளம்- கறுவலகஸ்வெவ பகுதியில், இன்று காலை (23) இடம்பெற்ற விபத்தில் 7 ​பேர் படுகாயமடைந்துள்ள நிலையில்,புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களை ஏற்றிச்சென்ற வான் ஒன்றுடன், இராணுவ பஸ் ஒன்று மோதுண்டதில், வானில் பயணித்த பெண்கள் விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

அநுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கி, இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் சிப்பாய்களுடன் பயணித்த பஸ், முன்னால் பயணித்த குறித்த வானை முந்திச் செல்ல முற்பட்டபோதே, விபத்து நேர்ந்துள்ளதாக, பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துடன் தொடர்புடைய  பஸ் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கறுவலகஸ்வெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X