2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வலய மட்ட போட்டிகள்

Yuganthini   / 2017 ஜூலை 09 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ரஸீன் ரஸ்மின்

முந்தல் பிரதேச செயலகத்திற்குற்பட்ட மங்கள எளிய சமுர்த்தி வங்கியின் கீழ் இயங்கும் சமுர்த்தி கெக்குலு சிறுவர் கழக அங்கத்தவர்களுக்கான வலய மட்ட  போட்டி நிகழ்ச்சிகள், நேற்று சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றது.

மங்கள எளிய சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் எஸ்.ஜே.எஸ்.பெரேராவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முந்தல் பிரதேச சமுர்த்தி மஹா சங்க முகாமையாளர் எச்.ரேணுகா உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் சிறுவர் கழக பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்தப் போட்டி நிகழ்ச்சியில் 7 வயது முதல் 18 வயது வரையிலான கெக்குலு சிறுவர் கழக அங்கத்தவர்கள் மாத்திரமே இப்போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, நாட்டார் பாடல்கள், கிராமிய நடனங்கள், பேச்சு, சித்திரம் வரைதல், கதை ௯றுதல், குறுநாடகம் உள்ளிட்ட பல போட்டி நிகழ்ச்சிகளில் மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X