Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 நவம்பர் 16 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக புத்தளத்தில் இருந்து வடக்கு மாகாணத்துக்குச் சென்றுள்ள மக்கள், மீண்டும் புத்தளம் நோக்கி வருகை தரும் வேளையில் கடும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, புத்தளம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன தெரிவித்தார்.
புத்தளத்தில் இருந்து நேற்றிரவு (15) மன்னாருக்குப் பயணித்த இ.போ.ச பஸ்கள் மீது, தந்திரிமலை - ஓயாமடுவ பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள், தனியார் வாகனங்களில் சென்றுள்ள பொதுமக்கள் மீண்டும் புத்தளம் நோக்கி வருகை தருவதற்கு அச்சமடைவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, குறித்த பொதுமக்களுக்கும் அவர்கள் பயணித்த வாகனங்களுக்கும் அதி உச்ச பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ௯றினார்.
இதன்படி, புத்தளத்தில் இருந்து மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு சென்று மீண்டும் புத்தளம் நோக்கி வருகை தரும் மக்களுக்கு சாலியாவெவ பகுதியில் இருந்து புத்தளம் வரை பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கி, அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் 78 நடமாடும் பொலிஸ் வாகனங்கள் பகல், இரவு வேளைகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு, இன்று (16) நண்பகல் வரை தேர்தல் தொடர்பில் எவ்விதமான வன்முறைகளும் இடம்பெற்றதாக பதிவாகவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago