Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 04, புதன்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 10 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி-மாம்புரி பிரதேசத்தில் இருந்து குளியாப்பிட்டிக்கு லொறி ஒன்றின் மூலம் தும்புத் தூள் என்ற போர்வையில் சட்ட விரோதமாக கொண்டுசெல்லப்பட்ட சுமார் 2 கோடிக்கும் அதிக பெறுமதியான பீடி இலைகளை கைப்பற்றியுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (10) அதிகாலை 1.00 மணியளவில் மதுரங்குளி நகரில் வைத்து லொறியொன்றை சோதனை செய்த போதே குறித்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேகத்தின் பெயரில் குறித்த லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலயடுத்தே லொறியை பொலிஸார் சோதனை செய்த போது, தும்புத் தூள் சாக்குகளை லொறியின் பின்புறமாக வைத்து உள்ளே 78 மூடைகளில் சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான பீடி இலைகள் கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
குருநாகல் - அலவ்வ பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பீடி இலைகள் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக சட்ட விரோதமான முறையில் இயந்திரப் படகின் மூலம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது கைப்பற்றப்பட்ட பீடி இலைகளையும், லொறியையும் மற்றும் சந்தேக நபரான லொறி சாரதியையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஸீன் ரஸ்மின்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
4 hours ago