2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

ரம்ய லங்காவால் பாதுகாப்பு ஆடைகள் விநியோகம்

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

கொவிட் 19 கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து  நாட்டை மீட்டெடுக்க அருஞ்சேவை புரிந்துவரும் வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பு ஆடைகளை, இலங்கை  ஜமாஅத்தே  இஸ்லாமியின் தேசிய ரீதியில் இயங்கிவரும் தொண்டு நிறுவனமான, ரம்ய லங்கா நாடளாவிய ரீதியில் விநியோகித்துள்ளது.

சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்த ஆடைகள் நாடளாவிய ரீதியில்  அமைந்துள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கொரோனா தொற்று அதிகளவில் காணப்படும் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் தள வைத்தியசாலை,  சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஆகியவற்றில் பணியாற்றும் வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களின் பயன்பாட்டுக்காகவும் ஒரு தொகை பாதுகாப்பு ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X