Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
டப்ளியூ. எம். பைசல்
எப்பாவல பிரதேசத்தில் 13 வயதுச் சிறுமியிடம் முறைகேடாக நடத்துகொண்ட இராணுவ சிப்பாய் ஒருவரை, கிராமவாசிகள் சிலர் கடுமையாகத் தாக்கியதில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி, குருவிட்ட இராணுவ முகாமில் சேவை புரியும் 28 வயதுடைய இந்த இராணுவ சிப்பாய் தலாவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
விடுமுறையில் எப்பாவல பிரதேசத்திலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டுக்கு வந்திருந்த சந்தர்ப்பத்திலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிராமவாசிகளின் தாக்குதலுக்குள்ளான இவர், தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .