2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

மின் சாதனத்தில் முடியை தயார் செய்த தாய் மரணம்

Editorial   / 2023 நவம்பர் 16 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின் சாதனம் மூலம் தலைமுடியை தயார் செய்து கொண்டிருந்த தாய் ஒருவர் மின்சாரம் தாக்கி வீட்டின் மேல் மாடியில் உள்ள குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொல்கசோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த காஞ்சனா சுபாசினி லொகுஹேவகே என்ற 30 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு மூன்று வயதில் பெண் பிள்ளையும் உள்ளது.

தேசிய பயிலுனர் தொழில்நுட்பப் பயிற்சி அதிகாரசபையில் முகாமைத்துவ உதவியாளராக சிறிது காலம் பணியாற்றிய திருமதி.சுபாஷினி, குழந்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .