2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

மாணவிக்கு நிர்வாண படங்களை அனுப்பிய பிரதி அதிபர்

Editorial   / 2023 மார்ச் 16 , பி.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா - அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவிக்கு தனது நிர்வாண புகைப்படங்களை WhatsApp ஊடாக அனுப்பியதாக கூறப்படும்   பாடசாலை  பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

WhatsApp செயலி மூலம் மாணவியிடம் தனது நிர்வாணத்தை காட்டுவது மட்டுமின்றி, பாடசாலை காலத்தில் அலுவலகத்திற்கு மாணவியை அழைத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில், மாணவியின் தாயார் குறித்த கையடக்கத் தொலைபேசியில் நிர்வாணப் புகைப்படத்தைப் பார்த்ததாகவும், அது குறித்து மகளிடம் கேட்ட போதே குறித்த விடயத்தை மாணவி தாயிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .