Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 04, புதன்கிழமை
Editorial / 2023 நவம்பர் 06 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ராஜகந்தலுவ தபால் நிலையத்திற்கு அருகில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால், புத்தளம் - கொழும்பு பிரதான வீதியூடான போக்குவரத்து சில மணித்தியாலங்கள் தடைப்பட்டது.
குறித்த மரம் விழுந்ததில் மின்சார இணைப்பு மற்றும் தொலைபேசி இணைப்புகள் பாதிக்கப்பட்டிருந்ததன.
மேலும், மரம் முறிந்து வீழ்ந்ததில் அந்த வீதியால் பயணித்த லொறியொன்றும் சேதமடைந்துள்ளதாகவும், எனினும் எவருக்கும் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
முறிந்து விழுந்த மரம் சில மணித்தியாலங்களின் பின்னர் அகற்றப்பட்டதாகவும் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
4 hours ago