2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

மக்களுக்காகக் கரங்களை கோர்த்தல்

Freelancer   / 2023 ஜூன் 13 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கட்டுமான சேவை வழங்குனர்களின் அபிவிருத்திச் சங்கம் மற்றும் புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கம் ஆகியவற்றுக்கிடையிலான கலந்துரையாடலொன்று அண்மையில் கட்டுமான சேவை வழங்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

புத்தளம் பிரதேசத்தின் சமூக, பொருளாதார, அபிவிருத்தி சேவைகளை வழங்கும் துறைசார் சங்கங்களின் கூட்டு நல்லுறவை விருத்தி செய்துகொண்டு பொது மக்களுக்கு உச்ச கட்ட சேவையை வழங்குவதற்கான வழிமுறைகளைக் கண்டறியும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் முன்னேற்றகரமான பல முன்மொழிவுகளும் தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

கட்டுமான சேவை வழங்குநர் சங்கத்தின் தலைவர் எஸ்.எம். அன்வர், செயலாளர் எம்.எஸ்.எம். நவாஸ், பொருளாளர் எச்.ஓ.எம். பைரூஸ் உட்பட அதன் நிறைவேற்றுச் சபை உறுப்பினர்களும், புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரி சங்கத்தின் தலைவர், செயலாளர், கூட்டுனர் உட்பட நிறைவேற்றுச் சபையின் உறுப்பினர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .