2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

Editorial   / 2023 ஜூன் 29 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி நாணயத்தாள்களை அச்சிட்டு அந்த நாணயத்தாள்களை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், 500 ரூபாய் மதிக்கத்தக்க 18 போலி தாள்கள் மற்றும் 50 ரூபாய் மதிக்கத்தக்க 17 போலி தாள்களுடன் 23 மற்றும் 28 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்திய மடிக்கணினி, பிரிண்டர், கணினி உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கம்பஹா, கிரிதிவிட்ட பிரதேசத்தில் நபர் ஒருவரும், அவருக்கு போலி நாணயத்தாள்களை வழங்கியதாகக் கூறப்படும் தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும்   கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .