2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

Janu   / 2023 ஒக்டோபர் 01 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை - வெலிகந்தை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சனிக்கிழமை (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அன்றைய தினம் தனது கடமையை முடித்துவிட்டு அதிகாலை 3 மணியளவில் பொலிஸ் நிலைய விடுதியில் தூக்கத்துக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே காலை 6 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் வலது கை மேற்பகுதியில் காயம் ஒன்று ஏற்பட்டு அதிலிருந்து கடுமையாக இரத்தம் வெளியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.


இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த ஹனீபா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தடவியல் பொலிஸ் பிரிவு மற்றும் வைத்திய அறிக்கையின் உதவியுடன் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .