2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பொலன்னறுவையில் சர்வதேச தபால் தினக் கொண்டாட்டம்

Editorial   / 2017 ஜூலை 05 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்துக்கான சர்வதேச தபால் தினக் கொண்டாட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி பொலன்னறுவையில் இடம்பெறவுள்ளது.

இதனையொட்டி, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள 34 உப தபால் நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கும் தபால் திணைக்களத்தின் அனைத்து பணியாளர்களினதும் பங்களிப்புடன், பிரதேச மட்டத்தில் இரத்ததான நிகழ்வுகள் மற்றும் சமூக சேவை நிகழ்வுகளை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளன.

இதற்காக 25,000 தபால் அலுவலகர்களின் சேவைகளை மதிப்பிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகளுக்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .