Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 27 , பி.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸின் அழைப்பின் பேரில் புத்தளத்துக்கு விஜயம் செய்த சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம், மதுரங்குளி புழுதிவயல் கிராமிய வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளை, நேற்று (26) பார்வையிட்டார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அக்கரைப்பற்று ஒன்றியம் ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வில், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் உட்பட முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த வைத்தியசாலைக்கு அத்தியாவசியத் தேவையான வைத்தியர் விடுதி மற்றும் நோயாளர் விடுதி என்பவற்றை நிர்மாணித்துக் கொடுக்குமாறு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அக்கரைப்பற்று ஒன்றியம், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸின் ஊடாக சுகாதார பிரதி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
குறித்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சுகாதார பிரதி அமைச்சர், குறித்த வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதி, வைத்தியர் விடுதி நிர்மாணிக்க முதற்கட்டமாக தலா 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். குறித்த இரண்டு வேலைத்திட்டங்களும் தற்போது ஆரம்பிக்கப்பட்ட நிலையில், குறித்த வேலைத்திட்டத்தை நேற்று முன்தினம் சுகாதார பிரதி அமைச்சர் பார்வையிட்டார்.
இதன்போது, வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
2 hours ago