Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 16 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்திகளுக்கு உதவுவதாக, கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் உறுதியளித்துள்ளார்.
இதற்கமைவாக, புத்தளம் மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு, அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் இணைந்து, முதற்கட்டமாக 10 மில்லியன் ரூபாய் செலவில் திட்ட வரைபொன்றைத் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.
புத்தளத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு அபாயம் குறித்தும் அது தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயும் விசேட கலந்துரையாடல், புத்தளம் பெரிய பள்ளிவாயலில், நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
“புத்தளம் தள வைத்தியசாலையை மறுசீரமைப்பு செய்வதற்கானத் திட்ட வரைபைத் தயாரித்து, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடாக சுமார் 1,000 மில்லியன் பெறுமதியான சுகாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
“மேலும், வைத்திய வசதிகளை புத்தள மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கும் குவைத் வைத்தியசாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதன்போது, சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக புத்தளம் நகர சபைக்கும் பிரதேச சபைக்கும் போதுமான டிரக்டர் உள்ளிட்ட வாகன வளங்களை பெற்றுத்தருமாறும் புத்தளம் பிரதேச செயலகத்துக்கும், நகர சபைக்கும் நிரந்தர செயலாளர்களையும் புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியை நிரந்தரமாக்குமாறும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago