Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில், சிங்கள மொழிப்பிரிவில் ஆசிரியராக கடமையாற்றிவரும் ஆசிரியை நிலந்தி பெர்ணான்டோ, நேற்று (21) பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
ஆசிரியை நிலந்தி பெர்னாண்டோ நீண்ட நாட்களாக, சிங்கள மொழி இலக்கியத்தில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருபவர்.
அவர் இது வரை நான்கு நூல்களை வெளியிட்டிருப்பதோடு, ஐந்தாவது நூல் பதிப்பில் இருக்கையில் ஆறாவதாக நாவல் ஒன்றினையும் எழுதி வருகிறார்.
இவரது நூல்கள் மாணவப்பராயத்தினை மையப்படுத்திய அறிவூட்டும் கதைகளாகவும் அமைந்திருக்கின்றன.
இவ்வாறான எழுத்தாளரை ஆசிரியராக கொண்டிருக்கின்ற புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் நிர்வாகம் இவருக்கான கௌரவிப்பு நிகழ்வை காலைக்கூட்ட வேளையில் நிகழ்த்தியது.
கல்லூரி அதிபர் ரஜியா சபீவுத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புத்தளம் வடக்கு மற்றும் ஆனமடுவ கோட்டப்பிரிவுகளுக்குப் பொறுப்பான சிங்கள மொழிப்பாட ஆசிரிய ஆலோசகர் எ.எச்.எம்.ரத்னசிரி அபேரத்ன கலந்து கொண்டு நூல் விமர்சனத்தை மேற்கொண்டார்.
கல்லூரியில் சிங்கள மொழிப்பிரிவில் நீண்ட காலமாக பொறுப்பாசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியை
மஹ்தியா அமீன் அவர்களால் வாழ்த்து கவியும் சமர்ப்பிக்கப்பட்டது.
பிரதி அதிபர் திருமதி ஸரீனா, உதவி அதிபர் திருமதி மாஹிரா ஆகியோரினால் மலர்ச்செண்டுகள் வழங்கப்பட்டு வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.
பாடசாலையின் அதிபர் மற்றும் முகாமைத்துவ குழு உறுப்பினர்களால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதோடு, பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், பிரதி அதிபர் எம். ரம்சின் நன்றி உரை நிகழ்த்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago