2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

புத்தளத்தில் கறுப்புப்கொடி; நிகழ்ச்சிகளை மாற்றினார் ஜனாதிபதி

Editorial   / 2019 மார்ச் 22 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - அருவக்காடு கழிவு முகாமைத்துவ நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிலர், இன்று (22) புத்தளத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியைச் சந்திக்க வாய்ப்பளிக்குமாறு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், இன்றைய தினம், ஜனாதிபதி கலந்துகொள்ளவிருந்த சில நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் பொலிஸார், இந்தப் போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக, நீதிமன்றத்தின் ஆணையைப் பெற்றுள்ள போதிலும், அந்த ஆணையையும் மீறி, ஆர்ப்பாட்டக்காரர்கள், தமது ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் பொலிஸாருடன், நீர் பவுசர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X