2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

பிள்ளையை தூங்க வைக்க 119க்கு அழைத்த தாய்

Editorial   / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரம் 3இல் கல்விப்பயிலும் பிள்ளையொன்று குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்களுக்கும் தனக்கும் இடையூறு விளைவித்து இடைஞ்சலாக இருப்பதாக பொலிஸ் அவரச சேவை தொலைபேசி இலக்கமான 119க்கு அழைப்பை எடுத்த அந்த பிள்ளையின் தாய், தனது பிள்ளைக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ள சம்பவமொன்று தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்த முறைப்பாட்டுக்கு அமைய தம்புள்ளை பொலிஸ் நிலையத்தின் பொலிஸார் இருவர், இரவு வேளையில் சுமார் ஒன்பதுக்கும் 15க்கும் இடைப்பட்ட கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் முறைப்பாட்டாளரின் வீட்டை தேடிச் சென்றுள்ளனர்.

தங்களுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்திய பொலிஸார், சத்தம்போட்டு கூப்பிட்டபோதும், சில வினாடிகள் அந்த வீட்டிலிருந்து எவருமே வெளியே வரவில்லை.

வீட்டின் கதவை தட்டிய போது அந்த வீட்டின் கதவை திறந்துகொண்டு பெண்ணொருவர் வெளியே வந்துள்ளார்.

“பிள்ளையினால் பெற்றோருக்கு கடுமையான தொந்தரவு என செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக வந்து​ள்ளோம்” என பொலிஸார் இருவரும் அந்தப் பெண்ணிடம் தெரிவித்துள்ளனர்.

“ஐயோ, நன்றாகவே சுணங்கிவிட்டது. அந்தப் பிள்ளை இப்போது தூங்குகிறாள். நான், பொலிஸூக்கு 4 மணிக்கு கதைத்தேன். இப்போது நேரம் ஒன்பது மணியாகிவிட்டது” என அந்தப் பெண் பதிலளித்துள்ளார்.

எனினும், இந்த புதுமையான பிரச்சினை தொடர்பில் பொலிஸார் அந்தப் பெண்ணிடம் விசாரித்துள்ளனர்.

“என்னுடைய பிள்ளை தரம் 3இல் கல்விப்பயிலுகின்றாள். இரவு வேளையில் சீக்கிரமாக தூக்குமாறு அறிவுறுத்தியும் அந்த பிள்ளை தூங்குவதே இல்லை. தூக்கத்துக்குச் செல்லாமல் பல்வேறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றாள்.  ஏனைய பிள்ளைகளையும் தூங்க விடுவதே இல்லை. கேளி, கிண்டல் செய்வதுடன் ஏனைய பிள்ளைகளையும், தந்தையையும் தூங்கவே விடுவதே இல்லை என்றாள்.

இந்த வீட்டுக்கு பொலிஸார் செல்லும் போது இரவு 9 மணியை நெருங்கியிருந்தது என்பதால், இந்த பிள்ளை எத்தனை மணிக்கு தூங்கவேண்டுமென நீங்கள் அறிவுறுத்தியுள்ளீர்கள் என அந்தப் பெண்ணிடம் பொலிஸார் கேட்டுள்ளனர்.

மாலை 6 மணிக்கு அந்தப் பிள்ளை தூக்கத்துக்குச் செல்லவேண்டும். முன்னதாக சாப்பாட்டை ஊட்டிவிட்டு அந்தப் பிள்ளையை நித்திரைச் செய்வேன். தரம் 3இல் பயிலும் அந்தப் பிள்ளை தூங்கமாட்டாள். தூங்க வைப்பதற்காக, பொலிஸாரை அழைப்பதற்கே அழைப்பை ஏற்படுத்தினேன் என்றும் அந்தப் பெண் பதிலளித்துள்ளார்.

அந்த தாய்க்கு கடுமையான அறிவுரைகளை வழங்கிய பொலிஸார், இவையெல்லாம் சிறிய பிரச்சினைகளாகும். பொலிஸாரின் நேரத்தையும் பொதுமக்களின் பணத்தையும் நாசம் செய்யாது. இனிமேலும் இவ்வாறு தேவையில்லாத முறைப்பாடுகளை செய்யாமல் இருக்குமாறு அப்பெண்ணுக்கு அறிவுரை கூறிவிட்டு பொலிஸார் இருவரும் அங்கிருந்து இரவோடு இரவாக பொலிஸ் நிலையத்துக்கு கிளம்பிவிட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .