2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

பஸ் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி

Freelancer   / 2022 ஜனவரி 22 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம நகரில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் 45 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கலாஓயாவை நோக்கி பயணம் செய்த தனியார் பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் நொச்சியாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணம் செய்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், மோட்டார் சைக்கிளை செலித்திச் சென்ற நபர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் கூறினர்.

விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .