2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

படுகாயமடைந்து உயிரிழந்த தந்தை; மகன் கைது

Freelancer   / 2023 மார்ச் 16 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுமையாகத் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் நேற்றிரவு (15) உயிரிழந்துள்ளார்.

மார்ச் 14 ஆம் திகதி குறித்த நபருக்கும் அவரின் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் அவர் மனைவியைத் தாக்க முயன்றுள்ளார். அதைத் தொடர்ந்து அன்றிரவு அவர் மது அருந்தி விட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது தன் மனைவியை இரும்புக் கம்பி ஒன்றைக் கொண்டு தாக்க முற்பட்ட வேளையில் அவருடைய மகள் மற்றும் மகன்  தாயைக் காப்பாற்றுவதற்காக குறுக்கிட்டுள்ளனர். குறித்த சலசலப்பில் தந்தையின் கையிலிருந்த இரும்புக் கம்பியைப் பறித்து 16 வயதான மகன் தந்தையின் தலையில் அடித்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுகாயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் இறந்து விட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மகனைக் கைது செய்து பொலிஸார் விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .