2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

பஞ்சாயுத ராணி கைது

Editorial   / 2023 ஏப்ரல் 07 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}



முன்பள்ளிக்கு சென்று அழுது கொண்டிருந்த குழந்தைகளை ஆறுதல்படுத்துவதற்காக சென்று சிறுவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் பஞ்சாயுதங்களை இரகசியமாக திருடுவதில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
ஆனமடுவ பொலிஸ் பிரிவின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகயே கைது செய்துள்ளனர். அப்பெண், ஆனமடுவ, ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைதான பெண், ஆலங்குளம், வட்டேகெதர உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முன்பள்ளிகளுக்குச் சென்று அங்கு அழுதுகொண்டிருக்கும் குழந்தைகளை ஆறுதல்படுத்துவதற்காகச் செல்வதாகக் கூறி சில காலமாக இந்த பஞ்சாயத்துகளைத் திருடி வந்துள்ளது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .