Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2017 மார்ச் 05 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஹம்மது முஸப்பிர்
புத்தளம், ஆனமடு தேர்தல் தொகுதிக்குட்பட்ட கருவலகஸ்வெவ பிரதேசத்தில், புதிய பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் திறன் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி இராஜாங்க அமைச்சருமான பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தப் பல்கலைக்கழ நிர்மாணத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள், இவ்வருடத்தினுள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. இந்தப் பல்கலைக்கழகத்தை, ஏனைய அனைத்து பல்கலைக்கழகங்களையும் விட மாற்றமான வகையில் உருவாக்குவதே, அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
“சம்பிரதாய முறையிலான பட்டதாரிகளை உருவாக்குவதலிருந்து விடுபட்டு, தொழில் துறையினை இலக்காகக் கொண்ட பட்டத்தை வழங்குவதை நோக்காகக் கொண்டே, இப்பல்கலைக்கழகம் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
“இங்கு, 8 பாடநெறிகளை அடிப்படையாகக் கொண்டு பட்டங்கள் வழங்கப்படும். பாடநெறிகளை 2019ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு, அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது. உலக வங்கி மற்றும் உயர்கல்வி அமைச்சின் நிதியொரதுக்கீடுகளின் கீழ், இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago