Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
துஷார தென்னகோன் / 2017 ஜூன் 21 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
விதை நெல்லை ஏற்றிக்கொண்டு, சென்றுகொண்டிருந்த டிமோ பட்டா லொறியொன்று கிரிந்தலே பகுதியில் திடீரெனத் தீப்பற்றி எரிந்தமையால், விதை நெல் முழுவதும் தீயில் கருகிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மின்னேரியா, கிரிந்தலே- பக்கமுன, பிரதான வீதியில் இன்று (21) காலை குறித்த லொறி தீப்பற்றிக்கொண்டது. இதனால், குறித்த லொறியும் தீயில் எரிந்துள்ளது.
பொலன்னறுவை, ஓனகம பிரதேசத்திலிருந்து அத்தனகடவலவுக்கு, நெல் விதைகளை விநியோகம் செய்யச் சென்ற லொறியே, இவ்வாறு எரிந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே இந்தத் தீ விபத்துக்குக் காரணம் என்றும் தெரியவருகின்றது.
லொறியில் பயணித்த உதவியாளரும் லொறிச் சாரதியும் லொறியிலிருந்து பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர் என்று, மின்னேரியாப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரியாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .