2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நாய் கடிக்கு உள்ளாகிய நிலையில் வெள்ளை மான் மீட்பு

துஷார தென்னகோன்   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெதிரிகிரிய – யுதகான பிரதேசத்தில் வீட்டுத் தோட்டம் ஒன்றுக்கு வந்திருந்த அரியவகை வெள்ளை மான், நாய் கடிக்கு உள்ளாகிய நிலையில், அவ்வீட்டினரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த மான், யுதகனாவ பிரதேசத்தில் வசித்து வரும் நபரொருவரின் வீட்டுத் தோட்டத்துக்குள்ளே நுழைந்துள்ளது.

பின்னர் இது தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு விரைந்த வனவிலங்கு அதிகாரிகளால் அம்மான் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

தற்போது, வனவிலங்கு மையத்துக்கு வௌ்ளைமான்  கொண்வரப்பட்டுள்ளதாக கால்நடை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X