Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 24 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை (25) புத்தளம் மதுரங்குளி பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டபா ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை (19) மதுரங்குளி பகுதியின் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின்போது?, மதுரங்குளி நகரிலுள்ள முன்மாதிரி பாடசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மாணவர்களுடன் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மேற்படி பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை புனரமைத்து தருமாறு ஜனாதிபதியிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி , பாடசாலை விளையாட்டு மைதானத்தை உடனடியாக புனரமைத்து கொடுக்குமாறு, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு பணிப்புரை வழங்கினார்.
இதனையடுத்து, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வருகை தந்த மறுநாளே, விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை இராணுவம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியன இணைந்து, மேற்படி மைதானத்தை புனரமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
இவ்வாறு புனரமைக்கப்பட்டு வரும் குறித்த விளையாட்டு மைதானத்தை மேற்பார்வை செய்யும் நோக்கில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மதுரங்குளி நகருக்கு விஜயம் செய்யவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா தெரிவித்தார்.
மதுரங்குளி நகருக்கு வருகை தரும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, மதுரங்குளி கோட்டக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பத்து பாடசாலைகளுக்கு, விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வைப்பார் எனவும், இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago