2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

நடத்துனர் மீது தாக்குதல்; ஒருவர் கைது

Janu   / 2023 ஒக்டோபர் 01 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநூராதபுரத்திலிருந்து - கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.ச பஸ் நடத்துனரை தாக்கிய சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் கெக்கிராவ பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இருவர் பஸ்ஸை நிறுத்தி நடத்துனர் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், அவர் வைத்திருந்த பயணச்சீட்டு இயந்திரத்தையும் பறித்தெடுத்து கீழே அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேக நபர்களை கைது செய்ய முயற்சி செய்த போதும் சந்தேக நபர்கள் அங்கிருந்து கெக்கிராவ பொது விளையாட்டு மைதானத்தை நோக்கி தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்டு வருவதாகவும் கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.

ரஸீன் ரஸ்மின்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .