Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 ஜூலை 17 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் திறந்த பிடியாணை பிறப்பித்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கற்பிட்டி அல் அக்ஷா தேசிய பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற வைபவமொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
விழா மைதானத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரை பொலிஸ் உத்தியோகத்தர் அழைத்துச் செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது.
கற்பிட்டியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் மூன்று தடவைகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் மூன்று தடவைகளும் நீதிமன்றத்தை தவிர்த்துள்ளார்.
சட்டத்தரணி அல்லது பாராளுமன்ற உறுப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தாமல் நீதிமன்றத்தை தவிர்த்ததன் அடிப்படையில் உடனடியாக பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான திருமதி அயோனா விமலரத்ன கற்பிட்டி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிகழ்வில், வடமேற்கு மாகாண ஆளுநர் அஹமட் நசீரும் கலந்துகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
4 hours ago